அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார் திருஞானசம்மந்தர் மதுரை சென்றதும் திருநாவுக்கரசர் திருவண்ணாமலை திருவோத்தூர் காஞ்சியம்பதி வந்து திருகழுக்குன்றம் வந்தார் பிறகு திருமயிலை திருவான்மியூர் திருவொற்றியூர் திருகாளத்தி திருக்கயிலாய யாத்திரை சென்று திருவையாறு வந்து திருபூந்துரத்தியில் திருஞானசம்மந்தரை சந்தித்தார். திருஞானசம்மந்தர் காஞ்சி வழியே திருகாளத்தி சென்று திரும்புகையில் திருமயிலை திருவான்மியூர் திருவொற்றியூர் திருவிடைச்சுரம் வந்து திருகழுக்குன்றம் வந்தார்.வைத்தார் நீடு திருக் கழுகுன்றில் நிருத்தனார் கழல் வணங்கி
திருக்கச்சி ஏகம்பம் பணிந் தேத்திக் திங்களார்
நேரக்கச் செந்சுடை கணிந்தார் நீடுபதி தொழ்நிளைவார்
வருக்கைச் செஞ்சுகளை பொழிதேன் வயல்வினை நாட்டிடை போய்
படுக்கைத் திள் களிற்றுரியார் கழுக் குன்றில் பாங்களைத்தார்
நீடு திருக் கழுகுன்றில் நிருத்தனார் கழல் வணங்கி
பாடு தமிழ்த் தோடை புனைந்து பாங்கு பல பதி களிலும்
சூடும் இளம் பிறைமுடியார் தமைதொழுது போற்றி போய்
மாடு பேருண் கடுருத்த வான்மியூர் மருந்களைத்தார்
பாடல் எண் : 1
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னை
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
கற்பகத்தை கண்ணாரக் கண்டேன் நானே
பாடல் எண் : 2
பல்லாடு தலைசடைமே லுடையான் தன்னைப்
பாய்புலித்தோலுடையானை பகவன் தன்னைப்
சொல்லோடு பொருளனைத்தும் ஆனான் தன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் அடர்த்தான் தன்னை
ஆளின்கீழ் இருந்தானை அமுதா நானைக்
கல்லாடை புனைந்தருளும் காபா லியைக்
கற்பகத்தை கண்ணாரக் கண்டேன் நானே